புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்த வேண்டாம் - மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சிங் வேண்டுகோள்

புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்த வேண்டாம் என்று மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-05-27 22:52 GMT

புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை திறந்து வைக்காமல் பிரதமர் மோடி திறக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இன்றைய விழாவை காங்கிரஸ், திமுக உள்பட 19 கட்சிகள் புறக்கணிக்கின்றன.

இந்த சூழலில் மல்யுத்த வீராங்கணைகள் இன்று நியாயம் கேட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில் போராட்டத்தை தவிர்க்க டெல்லி எல்லை மூடப்படுகிறது. மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றன. தற்போது பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் தான் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. நாளை புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி மல்யுத்த வீரர், வீராங்கணைகளுக்கு அரியானா காப்களிடம் இருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும் இவர்கள் இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகே போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அருகே போராட்டம் நடத்த வேண்டாம் என்று மல்யுத்த வீரர்களுக்கு பிரிஜ் பூஷன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நார்கோ சோதனையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றும், எதிர்ப்புத் தெரிவிக்கும் மல்யுத்த வீரர்கள் நாடாளுமன்றம் அருகில் எந்தவிதமான போராட்டமும் நடத்த வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்