உப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது

உப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2022-10-10 19:00 GMT

உப்பள்ளி;


தார்வாா் மாவட்டம் உப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோவில்கள், கடைகள் மற்றும் வீடுகளில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் நிலையங்களில் பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் அந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை உப்பள்ளி உபநகர் போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் அவர்கள் உப்பள்ளி தாலுகா உன்கல் பகுதியை சேர்ந்த ஆனந்த் மகாதேவப்பா கூகார் (வயது 26), தார்வார் மனக்கில்லா பகுதியில் வசித்து வரும் உசைன் காசிம்ஷாப் பேக் (34) மற்றும் சிரிடிநகர் பகுதியை சேர்ந்த பசவராஜ் பக்கீரப்பா ஊதேஷ் (40) என்பது தெரியவந்தது.

இவர்கள் இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடுவதையும், கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தை திருடுவதையும் ஒப்பு கொண்டனர். மேலும் இவர்கள் 3 பேர் மீதும் உப்பள்ளி, உபநகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து 10 கிராம் தங்கம், 60 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.42 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான ெபாருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்