கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஊர்த்தலைவரின் தந்தை உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஊர்த்தலைவரின் தந்தை உயிரிழந்தார்.;
சஹாரன்பூர்,
உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த ஊர்த்தலைவரின் தந்தை உயிரிழந்தார்.
ஜடோல் தாமோதர்பூர் கிராமத்தில் நேற்று கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஊர்த்தலைவர் மோனு மற்றும் அவரது தந்தை சேவரம் (60) இருவரும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சையின் போது சேவரம் உயிரிழந்தார். மோனு உயர் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவர்கள் இருவரையும் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்டோர் தடிகளால் தாக்கியதாக எஸ்பி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நேற்று மாலை, கட்டுமானப் பணி தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர். ஆனால் இரவில், மீண்டும் இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர் என்று கூறினார். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.