எலான் மஸ்க்கின் வேலை பற்றிய டுவிட்டுக்கு உ.பி. போலீசாரின் பதில் டுவிட்... நெட்டிசன்கள் வரவேற்பு

டுவிட்டரின் புதிய உரிமையாளர் எலான் மஸ்க்கின் வேலை பற்றிய டுவிட்டுக்கு உத்தர பிரதேச போலீசார் அளித்த பதில் டுவிட் நெட்டிசன்களை ஈர்த்து உள்ளது.;

Update: 2022-11-27 03:06 GMT



லக்னோ,


உத்தர பிரதேச போலீசார் சமூக ஊடகங்களில் டிரெண்டாகும் விசயங்களை பயன்படுத்தி, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை செய்து தங்களது திறமையை வெளிப்படுத்துவது வழக்கம்.

இந்த முறை, உலக பணக்காரர் மற்றும் டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்கின் வேலை பற்றிய டுவிட்டர் பதிவு ஒன்றை பகிர்ந்து, புதிய பதிவை வெளியிட்டு உள்ளனர்.

எலான் மஸ்க் தனது டுவிட்டில், சற்று பொறுங்கள். நான் டுவிட்டர் பதிவு போட்டால், அது பணி கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா? என பதிவிட்டு உள்ளார்.

இதனை டேக் செய்து உத்தர பிரதேச போலீசார் பதிலுக்கு, சற்று பொறுங்கள். உ.பி. போலீசார் ஒரு டுவிட்டர் பதிவு வழியே உங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினால், அது பணி கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா? என பதிவிட்டு உள்ளனர்.

தொடர்ந்து, அதற்கு பதிலாக அவர்களே ஆம். அது பணியாக எடுத்து கொள்ளப்படும் என பதிவிட்டு உள்ளனர். இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் பலவித விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதில் ஒருவர், உ.பி. போலீசார் எப்போதும் மெச்சத்தக்க வகையில் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஊட்டுபவர்களாக செயல்படுகின்றனர் என தெரிவித்து உள்ளார்.

கேள்வியும், அதற்கான பதிலும் உங்களுடையது? ஆன்லைனில் இருப்பது மற்றும் டுவிட்டரை மக்கள் சேவையாற்றும் நல்ல பணிக்கு பயன்படுத்தும் போற்றுதலுக்கு உரிய சேவைக்கு எனது வாழ்த்துகள் என மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று இன்னுமொருவர், சற்று பொறுங்கள், எலான் மஸ்க் அவர்களே. டுவிட்டரில் எங்களுக்கென்று டெஸ்லா உள்ளது. அது உ.பி. போலீசார். உங்களது பிரச்சனை என்னவென பதிவிடுங்கள். அது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வேகத்தில் தீர்க்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரை, உ.பி. போலீசார் ஒரு சேவையாக நிறுவியுள்ளனர் என ஒருவரும், இருவரும் சிறப்புடன் செய்கிறீர்கள்... நீங்கள் பிரச்சனைகளை எப்படி தீர்க்கிறீர்கள் என்பது ஒரு விசயமில்லை. அன்றைய நாளின் முடிவில், ஒரு தீர்வும், தீர்மானமும் தேவை என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்