தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

தாஜ்மகால் அருகே அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2024-05-19 21:56 IST
தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

ஆக்ரா,

தாஜ்மகால் அருகே உள்ள மசூதி வளாகத்திற்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் 22 வயது இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மதியம் தொழுகை நடத்துவதற்காக வந்தவர்கள் மசூதி வளாகத்தில் இளம்பெண்ணின் முகம் சிதைந்த நிலையில் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த பின்னர் சடலத்தை மசூதி வளாகத்திற்குள் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்