இரண்டு முறை தவறு செய்துவிட்டேன்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு

இரண்டு முறை நான் தவறு செய்தேன். ஆனால் அது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.;

Update:2025-03-30 19:13 IST
இரண்டு முறை தவறு செய்துவிட்டேன்: அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பரபரப்பு பேச்சு

பாட்னா,  

மந்திரி அமித்ஷா பீகார் தலைநகர் பாட்னாவில் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை  தொடங்கி வைத்தார். இதில் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ்குமார், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனிமேல் வெளியேறமாட்டேன் என தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'எனது சொந்த கட்சியில் உள்ள சிலரால் கடந்த காலத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து நான் விலகினேன். இந்த தவறை 2 முறை செய்து விட்டேன். ஆனால் இனி ஒருபோதும் அந்த தவறை செய்யமாட்டேன்' என கூறினார். மேலும் தனது மதசார்பற்ற கொள்கை குறித்து பெருமிதம் வெளியிட்ட நிதிஷ்குமார், காங்கிரசும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் முஸ்லிம்களை வெறும் ஓட்டுக்காகவே பயன்படுத்துவதாகவும், சமூகங்களுக்கு இடையேயான வன்முறையை தடுக்க அவர்களால் முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்