'ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்' ராம்லீலா நாடகத்தின் போது மேடையிலேயே உயிரிழந்த கலைஞர்...!

ராம்லீலா நாடகத்தின் போது நடித்த கலைஞர் ராம் பிரசாத் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2022-10-12 07:30 GMT

ஜான்பூர்,

உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் ராம்லீலா நாடகத்தின் போது சிவன் வேடத்தில் நடித்த கலைஞர் ராம் பிரசாத் என்பவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ராம் பிரசாத் மயங்கியதையடுத்து உடன் இருந்த கலைஞர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

'ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடி இருக்கிறார். நடனம் ஆடி கொண்டிருந்த போது மேடையிலேயே நடன கலைஞர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்