உத்தரபிரதேசத்தில் 16 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை
உத்தரபிரதேசத்தில் 16 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 16 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. இத்தனை பேருக்கு 2 டோஸ் செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை உத்தரபிரதேசம் பெற்றுள்ளது. இதன்மூலம் 99 சதவீதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18 வயதை தாண்டிய 100 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் சுமார் 34 கோடி டோஸ் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளது.