பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொன்று உடலை ஆற்றில் வீசிய தந்தை... அதிரவைக்கும் பிண்ணனி..!

கானாமல் போன பெண்ணின் சடலம் ஆற்றில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-04-07 01:20 GMT

தியோரியா,

உத்தரபிரதேச மாநிலம் மஹுதிஹ் காவல் நிலையத்திற்குட்பட்ட ஹெடிம்பூர் மதியா கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கானாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணின் சடலம் சோட்டி கந்தக் ஆற்றில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் தந்தையே கொலை செய்து ஆற்றில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது,

ஆற்றின் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. கிராமத்தில் உள்ள ஒரு இளைஞருடன் அவர் தொடர்பு வைத்திருந்த நிலையில், யாரோ ஒருவர் இதுபற்றி பெண்ணின் தந்தை நௌஷாத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியைக் கேட்டு மனமுடைந்த நௌஷாத், தன் மகளை கொன்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் இறந்த உடலை ஒரு சாக்கு பையில் கட்டி சோட்டி கந்தக் ஆற்றில் வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றத்தை செய்த நௌஷாத், தனது மகள் காணாமல் போனதாக நாடகமாடியுள்ளார். மேலும் தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் விசாரணையின் போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்று அதிகாரி கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்