உ.பி.: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்குதண்டனை விதிப்பு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2023-03-16 03:43 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அங்குள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமி இறந்து கிடந்த சம்பவம் ஆகஸ்ட் 18, 2022 அன்று நடந்தது. ஆகஸ்ட் 13 அன்று, அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளி போலீசார் கண்டுபிடித்தனர்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. காசியாபாத் போக்சோ நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்