உ.பி: வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு நகை கொள்ளை- அதிர்ச்சி சம்பவம்
உத்தரபிரதேசத்தில் வியாபாரியை துப்பாக்கியால் சுட்டு விட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ராகுல் என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடைக்கு துப்பாக்கியுடன் வந்த இருவர், கடையில் இருந்த தொழிலதிபரை சுட்டனர். அதை பார்த்து பெண்கள் அலறியபோது, அவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அவர்கள், நகையை கொள்ளையடித்து சென்றனர்.
பட்டப்பகலில் நகைக்கடையில் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் பதிவாகியுள்ள அடையாளர்களை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.