உ.பி. ஓட்டல் தீ விபத்தில் 4 பேர் பலி; 15 அரசு அதிகாரிகள் சஸ்பெண்டு

உத்தர பிரதேசத்தில் ஓட்டல் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 15 அரசு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-09-11 05:04 GMT


லக்னோ,



உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் ஹஜ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள லெவானா ஓட்டலில் கடந்த திங்கட்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, லக்னோ போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து ஓட்டலின் உரிமையாளர்கள் மற்றும் பொது மேலாளரை கைது செய்தனர். ஓட்டலுக்கு சீல் வைக்கவும், அதனை இடிக்கவும் லக்னோ நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தீ விபத்துக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் பெயர்கள் விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இதன்படி ஓய்வு பெற்ற 4 அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கவனகுறைவு, அலட்சியம் மற்றும் விதிமுறை மீறல் ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதுதவிர, லக்னோ நகரில் சட்டவிரோத முறையில் கட்டப்பட்ட ஓட்டல்களின் பட்டியலும் இணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விதிகளை காற்றில் பறக்க விட்ட ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்