மணமேடையில் கழன்ற மாப்பிள்ளையின் விக்...! மணமகள் அதிர்ச்சி...! நின்றது திருமணம்

உத்திரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளையின் விக் திடீரென்று கழன்று விழுந்ததால், ஏமாற்றமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-05-24 04:38 GMT

லக்னோ,

ஆயுஷ் குர்ரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'பாலா'. இளம் வயதிலேயே வழுக்கை விழுந்த இளைஞர் திருமணத்திற்காக தன்னுடைய வழுக்கையை எப்படி மறைக்கிறார் என்ற கதைக்களத்தில் உருவானது இத்திரைப்படம். இப்படத்தைப் போன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

திருமணத்துக்கு முந்தையநாள் மாலை அனைத்து சடங்குகளும் முடிந்துள்ளன. அடுத்த நாள் காலை திருமண நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்நிலையில், மணமகன் மண்டபத்திற்குள் நுழையும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது, எதிர்பாராவிதமாக அவரது தலையில் இருந்த 'விக்'கும் கழன்று விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் அவரைத் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டார். மணமகளை அவருடைய குடும்பத்தினர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மணமகள் ஒத்துக்கொள்ளவே இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, இது குறித்து மணமகள் வீட்டார் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். இந்த திருமணத்திற்காக ரூ. 5.66 லட்சம் செலவு செய்திருப்பதாகவும், அதனை மணமகன் வீட்டார் திருப்பித் தர வேண்டும் என்றும் மணமகளின் வீட்டார் கூறியிருக்கின்றனர். அதற்கு மணமகன் வீட்டாரும் ஒத்துக்கொண்டதை அடுத்து இந்தப் பிரச்சினை முடித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து மணமகளின் மாமா கூறுகையில், மணமகனின் வழுக்கை குறித்து அவர்கள் முன்பே கூறியிருந்தால் மனதளவில் எங்களுடைய பெண்ணை தயார் செய்திருப்போம். ஆனால், அவர்கள் அதை மறைத்தது அவர்கள் மீதான நம்பிக்கையை இழக்க வைத்துவிட்டது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்