காதல் விவகாரம்: ரெயில் முன் பாய்ந்து பள்ளி மாணவ - மாணவி தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவனும், மாணவியும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் கஞ்ச்நய் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ரிங்கு மவுரியா. அதேபள்ளியில் பிளஸ் 1 படித்து வருபவர் அஜய் சவ்ரசியா. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த காதலுக்கு இருவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரிங்குவும், அஜயும் இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பஸ்டி - கோரக்பூர் ரெயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.