உத்தரப்பிரதேசம்: டெம்போ மீது கார் மோதி விபத்து - 6 பேர் பலி, 7 பேர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் டெம்போ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2022-07-29 16:04 GMT

பண்டா,

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டாவில் இன்று டெம்போ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

கார் டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்