திருமணம் ஆகாமல் கர்ப்பம்: இளம்பெண்ணின் 28 வார கால கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆன இளம்பெண்ணின் 28 வார கால கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
கொல்கத்தா,
இந்தியாவில் முறையான அனுமதிபெற்று 20 வாரம் வரையிலான கருவை கலைக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 20 வாரங்களுக்கு மேல் கரு வளர்ந்துவிட்டால் கோர்ட்டின் அனுமதி பெற்றுமட்டுமே கருவை கலைக்க முடியும்.
இதனிடையே, டெல்லியை சேர்ந்த 20 வயதான திருமணம் ஆகாத இளம்பெண் தனது 28 வார கால கருவை கலைக்க அனுமதிக்கும்படி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இளம்பெண் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பு சம்மதத்துடன் உடல் ரீதியிலான உறவில் இருந்தேன். இதில் நான் கருத்தரித்துள்ளேன். ஆனால், 28 வாரங்கள் ஆன பிறகே கருத்தரித்தது குறித்து தெரியவந்துள்ளது. கருத்தரித்தது குறித்து பெற்றோருக்கு தெரியாது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு கருவை கலைக்க அனுமதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு இளம்பெண்ணின் 28 வார கருவை கலைக்க அனுமதி மறுத்துவிட்டது. கருவில் எந்த குறைபாடும் இல்லாததால் 28 வாரங்கள் நிறைவடைந்த கருவை கலைக்க அனுமதிக்க முடியாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.