மத்திய மந்திரி சபையில் மாற்றம்? - தெலுங்கானா பாஜக தலைவராக மத்திய மந்திரி நியமனம்

மத்திய மந்திரியான கிஷண் ரெட்டி தெலுங்கானா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-07-04 09:54 GMT

டெல்லி,

மத்திய சுற்றுலாத்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் கிஷண் ரெட்டி. இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்தியமந்திரி புரந்தேஸ்வரி ஆந்திர மாநில பாஜக தலைவராக நியமித்து பாஜக மத்திய தலைமை உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மந்திரியான கிஷண் ரெட்டிக்கு தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அவர் மத்திய மந்திரி சபையில் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி சுமையை குறைக்க கிஷண் ரெட்டி மந்திரி பதவியில் இருந்து விலக்கப்படலாம் எனவும் அவருக்கு பதில் புதிய மந்திரி நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்