மத்திய மந்திரிக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.;
டெல்லி,
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி கிஷன் ரெட்டி. இவருக்கு நேற்று இரவு 10.30 மணியளவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் உடனடியாக டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.