டெல்லியில் நடைபெறும் 'சர்வதேச வக்கீல்கள் மாநாடு' - மத்திய மந்திரி அமித்ஷா பங்கேற்பு

சர்வதேச வக்கீல்கள் மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றுள்ளார்.;

Update: 2023-09-24 09:37 GMT

புதுடெல்லி,

இந்திய பார் கவுன்சில் சார்பில் டெல்லி விக்யான் பவனில் 'சர்வதேச வக்கீல்கள் மாநாடு' நடைபெறுகிறது. 'நீதி வழங்கல் அமைப்பில் வளர்ந்து வரும் சவால்கள்' என்ற கருப்பொருளில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவில் சட்டங்களை எளிமையாகவும், எளிய மக்களுக்கு புரிய வைக்கவும் அரசு முயற்சித்து வருகிறது" என்று தெரிவித்தார். மாநாட்டில் நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சர்வதேச சட்ட அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பங்கேற்றுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்