காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் ஆலோசனை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2022-12-28 13:34 GMT

புதுடெல்லி,

டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லே-லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீரின் வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஜம்முவில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே போல் எல்லைப் பகுதிகளில் அத்துமீறி நுழையும் டிரோன்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, காஷ்மீர் காவல்துறை ஆகியவற்றின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்