எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் எப்போது டிஸ்சார்ஜ்? - வெளியான தகவல்

வயிற்றுப்பிரச்சினை காரணமாக நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-12-27 13:18 GMT

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு (வயது 63) நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார்.

வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, நிர்மலா சீதாராமன் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல்நலம் சீரடைந்ததையடுத்து நிர்மலா சீதாராமன் நாளை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்