நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்..!

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.;

Update: 2023-10-03 16:17 GMT

புதுடெல்லி,

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை (அக். 4-ம் தேதி) நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரப்போகும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க, பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் 5 மாநிலங்களில் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை (அக். 04-ம் தேதி நடக்க உள்ளதாகவும்,பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்