பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு
பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது மத்திய அரசு.;
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நெல், உளுந்து, கம்பு, பருத்தி, சூரியகாந்தி விதை, நிலக்கடலை, பாசிப்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை உயர்த்தியது. பருத்தி, கம்பு, உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது.
* நடுத்தர ரக பருத்திக்கான ஆதரவு விலை ரூ.3,750-ல் இருந்து ரூ.6.620 ஆக உயர்ந்துள்ளது.
* சோயா பீன்ஸ்-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,560ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்ந்துள்ளது.
* நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 4,000 ரூபாயிலிருந்து 6,377 ரூபாயாக அதிகரிப்பு
* சூரியகாந்தி விதை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் 3,750 ரூபாயிலிருந்து 6,760 ரூபாயாக அதிகரிப்பு
* சோயா பீன்ஸ் ஒரு குவிண்டால் 2,560 ரூபாயிலிருந்து 4,600 ரூபாயாக அதிகரிப்பு
* பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் எனவும் தகவல்
* ஹுடா சிட்டி சென்டரில் இருந்து சைபர் சிட்டி, குருகிராம் மற்றும் ஸ்பர் முதல் துவாரகா எக்ஸ்பிரஸ்வே வரை மெட்ரோ இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.5,452 கோடி செலவாகும்.