'பெண்கள் அதிகாரம் பெறுவதற்கு பொது சிவில் சட்டம் அவசியமானது' - கோவா முதல்-மந்திரி பேச்சு

பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் பெறுவதற்கு பொது சிவில் சட்டம் அவசியமானது என்று பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.

Update: 2023-07-02 00:19 GMT

பனாஜி,

போபாலில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்'' என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் பேச்சு குறித்து பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிர் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பெண்கள் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் பெறுவதற்கு பொது சிவில் சட்டம் அவசியமானது. இந்த விவகாரத்தில் பல கட்சிகள் அரசியல் செய்கின்றன. பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவத்தை அவர்கள் விரும்பவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். பொது சிவில் சட்டம் என்பது சாதி மற்றும் மத அடிப்படையிலானது அல்ல. இந்த சட்டத்தை எப்போது அமல்படுத்துவது என்பது மத்திய அரசின் முடிவைப் பொறுத்ததாகும்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்