பொது சிவில் சட்டம் : பிப்ரவரி 2ம் தேதி வரைவு மசோதா சமர்ப்பிக்கப்படும் ; உத்தரகாண்ட் முதல்-மந்திரி

பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.

Update: 2024-01-29 12:55 GMT

கோப்புப்படம்

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்திற்கான (யு.சி.சி.) வரைவைத் தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழு இதுவரை எடுத்த முடிவுகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

முன்னதாக பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை தயாரிப்பதற்காக சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை மாநில அரசு நியமித்திருந்தது.

இந்நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக பிப்ரவரி 2-ம் தேதி வரைவு மசோதா சமர்ப்பிக்கப்படும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியுடன் இருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் அதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாக இயற்றப்படும். இதன்மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். சுப்ரீம்கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, பிப்ரவரி 2-ம் தேதி மாநில அரசிடம் தனது வரைவு மசோதாவை சமர்ப்பிக்கும். அதன்பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்