இங்கிலாந்து செல்ல விரும்பும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா

இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா (விசிட் விசா) வழங்கப்படும் என இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார்.

Update: 2022-12-16 20:53 GMT

புதுடெல்லி, 

சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட குறுகிய கால நோக்கங்களுக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா (விசிட் விசா) வழங்கப்படும் என இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்வோருக்கான விசிட் விசாக்களை 15 வேலை நாட்களுக்குள் வழங்குவதே எங்கள் நோக்கம் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு சொன்னேன். இதில் சிறந்த செய்தி என்னவென்றால், இப்போது டெல்லியிலும், முழு விசா நெட்வொர்க்கிலும் நடந்த அற்புதமான வேலை மூலம் இது எட்டப்பட்டு இருக்கிறது' என குறிப்பிட்டு இருந்தார்.

இதன் மூலம் குறுகிய கால நோக்கங்களுக்காக இங்கிலாந்து செல்லும் இந்தியர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் விசா வழங்கப்படும் என கூறியுள்ள எல்லிஸ், சிக்கலான சில விவகாரங்களில் மட்டும் தாமதம் ஏற்படும் என்றும் தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்