விசா காலம் முடிந்தும் கோவாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த உகாண்டா பெண் கைது

விசா காலம் முடிந்தும் கோவாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த உகாண்டா பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-14 20:59 GMT

பனாஜி,

உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் கோவா மாநிலத்தில் தங்கி அங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு களித்து வந்துள்ளார்.

இதனிடையே, அந்த பெண் விசா காலம் முடிந்தும் கோவாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த பெண்ணை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்