உடுப்பி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வீரப்பா திடீர் ஆய்வு

உடுப்பி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி பி.வீரப்பா திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-10 15:09 GMT

மங்களூரு;


கர்நாடக ஐகோா்ட்டு நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல் தலைவருமாக இருப்பவர் பி.வீரப்பா. இவர் உடுப்பி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நீதிபதி பி.வீரப்பா நேற்று மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு செய்தார்.

அங்கு சென்று ஆஸ்பத்திரியின் வசதிகளையும், நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள நோயாளிகளிடமும், பொதுமக்களிடமும் ஆஸ்பத்திரியின் வசதிகள் குறித்தும் கேட்டு அறிந்தார். இதையடுத்து அவர் கூறுகையில் மாவட்ட ஆஸ்பத்திரி நன்றாகப் பராமரிக்கப்படுகிறது.

மேலும் இங்குள்ள கட்டிடங்கள் பழமையாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. அது தற்போது மேம்படுத்த பட்டுள்ளது. இங்கிருந்து அதிகமான சுகாதார சேவைகளைப் பெற பொதுமக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட கோர்ட்டு நீதிபதி சாந்தவீர சிவப்பா, மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் மதுசூதன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்