ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா கட்சி பெயர், தேர்தல் சின்னம் - இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு; உத்தவ் தாக்கரே எதிர்ப்பு

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-02-17 16:11 GMT

புதுடெல்லி,

மராட்டியத்தில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். அவர் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த அவர், பாஜகவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.

அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம்.

மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா பெயர், தேர்தல் சின்னம் வழங்கக்கோரி உத்தவ் தாக்கரே பிரிவு விடுத்த கோரிக்கையை நிராகரித்தது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்தநிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்பை சிவசேனா கட்சியாக அங்கீகாரம் செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு எங்கள் கோரிக்கையை ஏற்று, 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடும் என நம்பிக்கை உள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என ஏற்கனவே கூறி வந்துள்ளதாகவும்

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்றால், ஒரு தொழிலதிபர் அவர்களை வாங்கி முதலமைச்சர் ஆகிவிட முடியுமே? என உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்