பயங்கரவாதிகள் தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் மரணம்
ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.;
ராஜோரி,
ஜம்மு காஷ்மீரின் ராஜோரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு வீரர்கள் உயிரிழந்த நிலையில் 4 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் உதம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயங்கரவாதிகள் கண்டி வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்துவரும் ரஜோரி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.