ஒடிசாவில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!
என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.;
புவனேஷ்வர்,
ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிராக போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, 2 நக்சலைட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இன்று பலங்கிர் மாவட்டத்தில், நக்சலைட்டுகள் மற்றும் போலீசாருக்கு இடையே நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பலங்கிர் போலீஸ் எஸ்.பி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டர் நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு நக்சலைட்டுகளை தேடுதல் பணி நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.