அழகுக்கலை நிபுணர் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்

அழகுக்கலை நிபுணர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-01-10 18:46 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த 49 வயது பெண் அழகுக்கலை நிபுணராக (beautician) வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு ஆண் நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சீட்டு விளையாட்டில் அந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஆண் நபர் தனது காரில் அந்த பெண்ணை குஜராத்தின் அலகாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த ஆண் நபரின் நண்பர்கள் மேலும் 2 பேரும் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அங்கு அந்த 3 பேரும் மது குடித்துள்ளனர். பின்னர், அந்த பெண் அழகுக்கலை நிபுணரை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர் இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளி உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவான ஒருநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்