இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை முடக்கிய டுவிட்டர்

ஆபாச படங்களை பதிவிட்ட 57 ஆயிரம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

Update: 2022-10-02 09:33 GMT

கலிபோர்னியா,

ஆபாச படங்களை பதிவிட்ட 57 ஆயிரம் கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து, அவற்றை ஊக்குவிக்கும் நபர்களது டுவிட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என்று, பெண்கள் ஆணையத்தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை, ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்