லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: 3 பேர் சாவு
கலபுரகியில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;
கலபுரகி:
கலபுரகி தாலுகாவை சேர்ந்தவர் தீபக் (வயது 45). இவர் குடும்பத்துடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது தீபக் தனது மோட்டார் சைக்கிளில் மேலும் 2 சிறுவர்களை ஏற்றி கொண்டு சென்றார். அவர்கள் மகாகான் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சென்றபோது, அந்த சாலையில் எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தீபக், ராகுல் (17), யுவராஜ் (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து மகாகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.