நிலஅபகரிப்பு குற்றச்சாட்டில் யூசுப் பதானுக்கு நோட்டீஸ் - குஜராத் அரசு நடவடிக்கை
யூசுப் பதானுக்கு குஜராத் மாநிலம் வதோதரா நகரில் சொந்தமாக வீடு உள்ளது.;
வதோதரா,
குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. இந்தநிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்குவங்காளத்தின் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளவருமான யூசுப் பதானுக்கு குஜராத் மாநிலம் வதோதரா நகரில் சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அருகில் உள்ள வதோதரா மாநகராட்சிக்கு சொந்தமான 978 சதுர மீட்டர் நிலத்தை யூசுப் பதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக யூசுப் பதானுக்கு வதோதரா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து யூசுப் பதான் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.