சிறுத்தை தோல் விற்க முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது
சிறுத்தை தோல் விற்க முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பெங்களூரு: பெங்களூரு நாகரபாவி அருகே உள்ள ஒரு கோவில் முன்பாக சிறுத்தை தோல் விற்க சிலர் முயற்சிப்பது குறித்து சி.ஐ.டி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சிறுத்தை தோல், பற்கள், நகங்களை விற்க முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கோலார் தங்கவயலை சேர்ந்த ஜான் விக்டர், சுரேஷ், பாபுஜிநகரை சேர்ந்த சந்தோஷ்குமார், பாரதி, சுவாதிஎன்றுதெரிந்தது. இவர்களில் பாரதியும், சுவாதியும் காதலர்கள் ஆவார்கள். கைதான 5 பேரிடம் இருந்து ஒரு சிறுத்தை தோல், பற்கள், நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.