யானை தந்தங்கள் விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்தவர் கைது

யானை தந்தங்கள் விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-21 21:33 GMT

பெங்களூரு: பெங்களூரு ராம ஆஞ்சனேயா ரோடு, சுங்கேனஹள்ளியில் உள்ள அரசு பள்ளியின் பின்புறம் யானை தந்தங்களை விற்பனை செய்ய ஒரு நபர் முயற்சி செய்வதாக அனுமந்தநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குபையுடன் சுற்றிய மா்மநபரை பிடித்து விசாரித்தனர். அந்த பையில் சோதனை செய்த போது 2 யானை தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த காளியப்பன் (வயது 50) என்று தெரிந்தது. காளியப்பனிடம் இருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான காளியப்பன் மீது அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்