குஜராத் சோமநாதர் ஆலயத்தில் மூவர்ண மின்னொளி அலங்காரம்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

Update: 2022-08-13 15:28 GMT

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சோமநாதர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இன்று இந்திய தேசிய கொடியின் மூவர்ண மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.

அந்த வகையில் குஜராத் சோமநாதர் ஆலயத்தில் தேசிய கொடியின் மூவர்ண மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சோமநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்