உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாகடாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றதாக டாக்டர் உள்பட 2 பேரிடம் ரூ.3 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-04-01 04:45 GMT

சிக்கமகளூரு-

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் பணம், பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுக்க தீவிர சோதனை நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிக்கமகளூரு மாவட்டத்திலும் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூடிகெரே தாலுகா கொட்டிகேஆரா பகுதியில் சிக்கமகளூரு-மங்களூரு சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த டாக்டர் என்பது தெரியவந்தது. மேலும் அவரது காரில் ரூ.2 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. அப்போது அவர் தர்மஸ்தலா மஞ்சுநாதர் மற்றும் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்த எடுத்து செல்வதாக கூறினார். ஆனாலும் அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லும்படி தெரிவித்தனர்.  இதேபோல், பனகல் அருகே காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்துகொண்டனர். இதுகுறித்து தனித்தனியாக பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்