தெலுங்கானாவில் துயரம்; லாரியில் இருந்து கிரானைட் கற்கள் சரிந்து விழுந்து 3 பேர் பலி

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் நகரத்திற்கு அருகே நேற்று முன்தினம் இரவில், 8 பேர் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.;

Update: 2023-01-02 03:46 GMT

மகபூபாபாத்,

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் நகரத்திற்கு அருகே நேற்று முன்தினம் இரவில், 8 பேர் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து மற்றொரு இடத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்று கொண்டு இருந்தனர். அதே நேரத்தில் பெரிய கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ஒன்று அவர்களின் ஆட்டோவை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக சில கிரானைட் கற்கள் சரிந்து ஆட்டோவின் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோவில் சென்ற 2 பேர் நசுங்கி செத்தனர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். ஆட்டோவில் இருந்த 5 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் பெயர் பனோது சுமன் (வயது 35) - ஆட்டோ டிரைவர், மற்றும் ஸ்ரீகாந்த்(30), நவீன்(30) என்று தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து குரவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்