குஜராத்தில் சோகம்: ஒருவரை காப்பாற்ற போய் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் ஏரி நீரில் மூழ்கி பலி

குஜராத்தில் ஏரியில் குளிக்க போன இடத்தில் ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்ற போய் அடுத்தடுத்து 5 இளைஞர்கள் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2023-05-14 10:32 GMT

வதோதரா,

குஜராத்தின் பொத்தடு நகரில் கிருஷ்ணசாகர் என்ற ஏரி ஒன்று உள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து உள்ள நிலையில், 2 இளைஞர்கள் ஏரி நீரில் குளித்து சூட்டை தணிக்க போயுள்ளனர்.

அவர்கள் நீச்சல் அடித்து சென்று, மூழ்கி குளித்து கொண்டிருந்தபோது, ஏரியின் ஆழம் நிறைந்த பகுதிக்கு அவர்கள் தெரியாமல் சென்று விட்டனர் என கூறப்படுகிறது.

இதனால், 2 இளைஞர்களும் ஏரியில் மூழ்கியுள்ளனர். அவர்களின் கூக்குரல் கேட்டு, கரையில் நின்றிருந்த 3 பேர் உடனடியாக ஏரியில் குதித்து, அவர்களை காப்பாற்ற சென்றனர்.

ஆனால், இந்த சம்பவத்தில் இளைஞர்கள் 5 பேரும் ஏரி நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மருத்துவமனைக்கு பொத்தடு எஸ்.பி. கிஷோர் பலோலியா அனுப்பி வைத்து உள்ளார்.

ஏரியில் மூழ்கி உயிரிழந்த அனைவரும் 16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். பின்னர், அவர்களின் குடும்பத்தினரிடம் இளைஞர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்