'உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசுவதா?' - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசுவதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-16 19:18 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பாலித்தீவில் இந்தோனேசியா வாழ் இந்தியர்களை சந்தித்துப்பேசினார். அப்போது அவர், "2014-ம் ஆண்டுக்கு முந்தைய, பிந்தைய இந்தியாவுக்கு இடையே பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டுதான் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது, எனவே அதன்பின்னர் தான் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்த்தும் வகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு அரசியலை வெளிநாட்டில் பேசியதற்காக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில், "நமது பிரதமர்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் உள்நாட்டு அரசியல், பாரபட்சம், தவறான எண்ணங்களை எடுத்துச்செல்வதில்லை என்பது நீண்ட கால பாரம்பரியம் ஆகும். இந்த ஆரோக்கியமான பாரம்பரியம், 2014 மே மாதத்துக்கு பிறகு (பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு) உடைக்கப்பட்டு விட்டது" என கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்