மத்தியபிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் பலி - 20 பேர் படுகாயம்

எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;

Update: 2024-09-02 08:31 GMT

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ள குகாஸ் கிராமத்தை சேர்ந்த சிலர், டிராக்டர் மூலம் ஜடாசங்கர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர். அதிகாலையில் பதேபூர் அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்