சுற்றுலா வேன்-அரசு பஸ் நேருக்குநேர் மோதல்

சுற்றுலா வேன்-அரசு பஸ் நேருக்கு நேர் மோதியதில் 12 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

ஹாசன்:-

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர், சுற்றுலாவிற்காக வேனில் சென்று கொண்டிருந்தனர். ஹாசன் அருகே பேளூரு முக்கிய சாலையில் வந்தபோது, எதிரே வந்த அரசு பஸ், சுற்றுலா வேன் மீது மோதியது. இந்த விபத்தில் சுற்றுலா வேனில் இருந்த 12 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அரசு பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு அருகே இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பேளூரு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து பேளூரு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்