ஆந்திராவில் மேலும் ஒரு தக்காளி விவசாயி மர்ம நபர்களால் கொலை

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் இரண்டாவது தக்காளி விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-07-17 11:01 GMT

அன்னமயா,

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அன்னமயா மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் இரண்டாவது தக்காளி விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று இரவு அன்னமயா மாவட்டத்தில் உள்ள பெட்டா திப்பா சமுத்திரம் அருகே மதுகர் ரெட்டி என்ற தக்காளி விவசாயி பயிர்களை காக்கும் வகையில் தனது பண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென மர்ம நபர்கள் மதுகரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக அன்னமயா மாவட்டம், மதனப்பள்ளி மண்டலத்தில் உள்ள போடுமல்லாதிண்ணே கிராமத்தில் நரேம் ராஜசேகர் ரெட்டி (வயது 62) என்ற தக்காளி விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்