போலீஸ்காரர் எனக்கூறி, மக்களிடம் பணம் வசூலித்தவர் கைது

போலீஸ்காரர் எனக்கூறி, மக்களிடம் பணம் வசூலித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-17 21:32 GMT

பெங்களூரு: பெங்களூரு ஆர்.எம்.சி.யார்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் படியாக சுற்றிய வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு காத்து நின்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மூடலபாளையாவை சேர்ந்த வினய்குமார் (வயது 24) என்று தெரிந்தது.

இவர், என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருந்தார். இதற்கிடையில், சமீபத்தில் சந்திரா லே-அவுட்டில் ஒரு மோட்டார் சைக்கிளை வினய்குமார் திருடி இருந்தார். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்ததுடன், தான் போலீஸ்காரர் எனக்கூறி தனியாக நடந்து செல்லும் நபர்கள், பொதுமக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது. கைதான வினய்குமாரிடம் இருந்துஒரு மோட்டார் சைக்கிள்பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்