சோனியா காந்தியிடம் நலம் விசாரித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்கள் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சோனியாகாந்தி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
'அரசுமுறைப் பயணமாக புதுடெல்லிக்கு வருகை தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.