தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை பள்ளிக்கூடத்திற்குள் கட்டிப்போட்ட விவசாயிகள் - எங்கு நடந்தது... காரணம் என்ன?

தெருவில் சுற்றித்திரிந்த மாடுகளை விவசாயிகள் பள்ளிக்கூடத்திற்குள் கட்டிப்போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.;

Update: 2023-01-07 22:30 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் ரசுல்பூர் கலம், கரினா பனி, அஸ்லாபுர், அசுரா, ஹுண்டா மஜ்ரா, ஹஸ்ரத்புர், அபிஹன் ஆகிய கிராமங்களில் அதிக அளவில் ஆதரவற்ற மாடுகள் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

இதனிடையே, தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடை மாடுகள் நெல் உள்பட பயிர்களை நாசம் செய்வதாகவும், அவ்வாறு சுற்றித்திரியும் மாடுகளை கோசாலையில் அடைக்கும்படியும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கால்நடை மாடுகள் பயிர்களை நாசம் செய்வதாலும் அதை அதிகாரிகள் தடுத்து மாடுகளை கோசாலையில் அடைக்காததாலும் ஆத்திரமடைந்த விவசாயிகள் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து அங்குள்ள அரசு பள்ளிகளில் அடைத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் பள்ளிகளில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளை அவிழ்த்துவிட்டனர். பின்னர், தெருவில் சுற்றித்திரியும் மாடுகளை கோசாலை அமைத்து அங்கு கட்ட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.   

Tags:    

மேலும் செய்திகள்