பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: பிரதமர் மோடிக்கு, பசவராஜ் பொம்மை நன்றி

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதால் பிரதமர் மோடிக்கு, பசவராஜ் பொம்மை நன்றி தெரிவித்துள்ளார்;

Update: 2022-05-22 21:39 GMT

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் ரூ.7 குறைக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் மீதான வரியை குறைத்ததற்கு பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

உஜ்வாலா கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கும் அறிவிப்பையும் வரவேற்கிறேன். இந்த அறிவிப்பு பெண்களுக்கு மிகப்பெரிய வரபிரசாதம். நமது அரசாங்கம் மக்களுக்கானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்