இம்மாவத் கோபாலசாமி கோவிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை

இம்மாவத் கோபாலசாமி கோவிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-14 16:15 GMT

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இம்மாவத் கோபாலசாமி மலை உள்ளது. இங்கு கோபாலசாமி கோவில் அமைந்துள்ளது. மலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வனவிலங்குகள் சுதந்திரமாக சுற்றித்திரிவது வழக்கம். இருப்பினும் கோவிலுக்கு செல்வோர் வாகனங்களில் மலைக்கு சென்று வந்தனர்.

இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வனவிலங்குகளும் கடுமையாக அவதிப்படுவதாகவும், எனவே கோபாலசாமி மலைக்கு தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், வனத்துறையினர், இம்மாவத் கோபாலசாமி கோவிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு இயக்கப்படும் வனத்துறை மற்றும் அரசு பஸ்களில் மட்டுமே பொதுமக்கள் செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்